"மரணம்" ஒரு அறிமுகம்

மரணம் " மரணம்" என்பது 6 அறிவு படைத்த மனிதர்களுக்கு புரியாத ஒரு புதிர்! (5 அறிவு மற்றும் அதற்கு கீழே உள்ள ஜீவராசிகளுக்கு இதைப்பற்றி அறிந்து கொள்ளும் சக்தி கிடையாது) பலர் பயந்து மரணத்தைப் பற்றி நினைப்பதோ அல்லது பேசுவதோ இல்லை. நாம் இன்னாளில் பார்க்கும் பல விஷயங்களுக்கு விளக்கம் தேவை இல்லை. அப்படித் தெரியாது இருந்தாலும், படித்தோ அல்லது தெரிந்தவர்களிடத்தில் கேட்டோ தெரிந்து கோள்கின்றோம். ஆனால், "மரணம்" என்கின்ற விஷயம் புதிர் போன்ற தத்துவ ரீதியான விஷயம். அதை விளக்க வல்லதே வேத, சாஸ்திர, புராண, இதிஹாஸம் போன்றவை. "மரணம்" என்றால் என்ன? மரணத்திற்குப் பின் பூத உடலைப் பிரிந்த ஆத்மா என்னவாகின்றது? இது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலருக்கு ஆர்வம் இருக்கின்றது. இதை விளக்குவதன் நோக்கமே இந்தக் கட்டுரை. என் மனதுக்குத் தோன்றும் கற்பனையை எல்லாம் இங்கு விளக்குவது என்பது சரியல்ல. வேத, சாஸ்திர, புராண, இதிஹாசங்களில் என்ன கூறுயுள்ளதோ, அவற்றை மேற்கோளிட்டு அதில் உள்ள விஷயங்களை மட்டுமே விளக்குவது தான் நோக்கம். விஞானப்படி "ஆத்மா" என்ற ஒன்றை ஒத்துக் கொள்...