"மரணம்" ஒரு அறிமுகம்

 மரணம்


"மரணம்" என்பது 6 அறிவு படைத்த மனிதர்களுக்கு புரியாத ஒரு புதிர்! (5 அறிவு மற்றும் அதற்கு கீழே உள்ள ஜீவராசிகளுக்கு இதைப்பற்றி அறிந்து கொள்ளும் சக்தி கிடையாது) பலர் பயந்து மரணத்தைப் பற்றி நினைப்பதோ அல்லது பேசுவதோ இல்லை. 
நாம் இன்னாளில் பார்க்கும் பல விஷயங்களுக்கு விளக்கம் தேவை இல்லை. அப்படித் தெரியாது இருந்தாலும், படித்தோ அல்லது தெரிந்தவர்களிடத்தில் கேட்டோ தெரிந்து கோள்கின்றோம். 
ஆனால், "மரணம்" என்கின்ற விஷயம் புதிர் போன்ற தத்துவ ரீதியான விஷயம். அதை விளக்க வல்லதே வேத, சாஸ்திர, புராண, இதிஹாஸம் போன்றவை. 

"மரணம்" என்றால் என்ன?
மரணத்திற்குப் பின் பூத உடலைப் பிரிந்த ஆத்மா என்னவாகின்றது? இது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலருக்கு ஆர்வம் இருக்கின்றது.  இதை விளக்குவதன் நோக்கமே இந்தக் கட்டுரை. என் மனதுக்குத் தோன்றும் கற்பனையை எல்லாம் இங்கு விளக்குவது என்பது சரியல்ல. வேத, சாஸ்திர, புராண, இதிஹாசங்களில் என்ன கூறுயுள்ளதோ, அவற்றை மேற்கோளிட்டு அதில் உள்ள விஷயங்களை மட்டுமே விளக்குவது தான் நோக்கம். 
விஞானப்படி "ஆத்மா" என்ற ஒன்றை ஒத்துக் கொள்வதே இல்லை. ஆகையினால், இதற்கு விடையை நம் "சநாதன தர்மம்" (ஹிந்து தர்மம்) தான் விளக்க வல்லது.  

மரணத்திற்குப் பின் பூத உடலைப் பிரிந்த ஆத்மா என்னவாகின்றது? இறந்தவர்களுக்கு நாம் எந்த விதமான கர்ம காரியங்களைச் செய்கின்றோம்? இதைப் பற்றியெல்லாம் பார்ப்போம். 

நம் சனாதன தர்மத்தின்படி நம் "ஆத்மா" வானது பிறப்பு-இறப்பு என்கின்ற சக்கரத்தில் சுழன்று கொண்டே இருக்கின்றது. 

பகவான் கிருஷ்ணர் "பகவத் கீதா" வில் இதை விளக்குகின்றார். 
அத்யாயம்-2, ஸ்லோகம்-27.

जातस्य हि धृवो मृत्युर्द्रुवं जन्म मृतस्य च |

तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि || |२७|

ஜாதஸ்ய ஹி த்4ருவோ ம்ருத்யுஹு த்3ருவம்

ஜன்ம ம்ருதஸ்ய ச,

தஸ்மாதபரிஹார்யேர்தெ2 ந தவம் 

ஶோசிதுமர்ஹஸி.


இதன் அர்த்தம் .... 
பிறப்பு என்பது நிச்சயமாக உள்ளது மரணத்திற்குப் பின், பின்பு பிறப்பிற்குப் பின் மரணமும் கூட, ஆகவே பரிகாரம் இல்லாத விஷயத்திற்கு நீ ஏன் கவலைப் படுகின்றாய். 

பிற மதங்களான கிருத்துவ, பௌத்த, ஜைன மதங்கள் "பிறப்பு இறப்பு என்னும் சக்கரம்" என்று ஒன்று உள்ளது என்று நம்புவது இல்லை. 

அத்யாயம்-2, ஸ்லோகம்-29.

आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् - आश्चर्यवद् वदति तथैव चान्य: |

आश्चर्यवच्चैनम् अन्य: शृणोति - श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् || |२९|


ஆஶ்சர்யவத் பஶ்யதி கஶ்சிதேனம் ஆஶ்சர்யவத் வததி ததை2வ சான்யஹ,
ஆஶ்சர்யவச்சைனம் அன்யஹ ஶ்ருணோதி ஶ்ருத்வாப்யேனம் வேத ந சைவ கஶ்சித். 
இதன் அர்த்தம் .... 
இந்த ஆத்மாவை சிலர் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர், மற்றும் சிலர் இதைப் பற்றி ஆச்சரியமாகப் பேசுகின்றனர், இன்னும் சிலர் இதைப் பற்றி ஆச்சரியமாகக் கேள்விப்படுகின்றனர். இவ்வாறாகவெல்லாம் இதைப் பற்றி கேட்டும் இதைப் பற்றி அறிந்தவர்கள் யாவரும் இலர்.  

தொடரும் .............. 




Comments

  1. யாவரும் இலர்? அப்பொ அது யாருக்குத் தெரியும்?

    ReplyDelete
  2. An attempt to explain as to "What's death' . Fine

    ReplyDelete

Post a Comment